வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

இந்திய வம்சாவளி எழுத்தாளருக்கு பிரிட்டிஷ்  இதழியல் விருது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் அனில் அனந்தசாமிக்கு இயற்பியலுக்கான பிரிட்டிஷ் இதழியல்

News image
Updated On :2 மார்ச் 2013, 1:01 am IST

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எழுத்தாளர் அனில் அனந்தசாமிக்கு இயற்பியலுக்கான பிரிட்டிஷ் இதழியல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:  லண்டனில் பிரபலமான நியூ சயின்ட்டிஸ்ட் மேகஸின் என்ற அறிவியல் இதழின் ஆலோசகர் அனில் அனந்தசாமி. இவர் எழுதிய "தி எட்ஜ் ஆஃப் ஃபிஸிக்ஸ்' என்ற புத்தகத்துக்கு அறிவியல் மற்றும் தொழில் மேம்பாட்டு மையம் சார்பாக பிரிட்டிஷ் இயற்பியல் இதழியல் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த மையம், இயற்பியல் துறையில் சிக்கலான விஷயங்கள் மற்றும் நுணுக்கமான அறிவியல் சூத்திரங்களுக்கு எளிமையான தீர்வுகளைக் கண்டுபிடித்து இளைய தலைமுறையினரின் ஆராய்ச்சிக்கு உதவும் பத்திரிகையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த விருதை வழங்க முடிவு செய்தது.

அந்த வகையில் இந்த ஆண்டு முதலாவது பிரிட்டிஷ் இயற்பியல் இதழியல் விருதைப் பெற்றுள்ளார் அனில் அனந்தசாமி. சர்வதேச அளவில் மிகப்பெரிய வானொலி தொலைநோக்கியை வடிவமைத்து கட்டமைக்கும் திட்டத்துக்கு அனந்தசாமியின் இந்த வானியல் ஆராய்ச்சிக் கட்டுரை பெரிதும் பயனளிக்கும் என்பதாலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது பெறுபவருக்கு ஜப்பானில் நடைபெறும் சர்வதேச இயற்பியல் ஆராய்ச்சி கருத்தரங்கில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.

விருது குறித்து அனந்தசாமி கூறியது:  இயற்பியலைப் பற்றி எழுதுவதும் ஆராய்ச்சி செய்வதும் எனக்கு மிகவும் பிடித்தவை. நான் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு பணிக்கு விருது கிடைத்திருப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.